Site icon Tamil News

இலங்கை : களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் போதைபொருள் பாவனை இருப்பதாக தகவல்!

களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் சிறுவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகளை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரசன்ன பிரம்மனகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் பிரபலமான பாடசாலைகள், பெயர்களைக் குறிப்பிடுவது பாடசாலைகளின் நற்பெயருக்குக் கேடு விளைவிப்பதாக அதிபர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு ஆசைப்படுகின்றனர். பாடசாலை மாணவர்களை இந்த போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ”

2023 ஆம் ஆண்டு களுத்துறை பிரிவில் 1,334 ஹெரோயின் தொடர்பான வழக்குகள், 904 ஐஸ் தொடர்பான வழக்குகள் மற்றும் 5,880 மதுபானம் தொடர்பான வழக்குகள் உட்பட 10,586 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version