Site icon Tamil News

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்த யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைப்போம் – சாகர

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை எதிர்வரும் வாரம் நீதியமைச்சரிடம் முன்வைப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,  நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டமூலங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான விடயங்கள் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் உறுப்புரைகளுக்கும், ஜனநாயக கொள்கைக்கும் எதிரானதாக உள்ளது.ஆகவே இந்த சட்டமூலம் முழுமையாக திருத்தம் செய்யப்பட வேண்டும்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டமூலங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லைதொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த மே தின கூட்டத்தில் வெளியிடப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவது தொடர்பில் தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

Exit mobile version