Site icon Tamil News

இலங்கை – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு!

இலங்கை – ஆனமடுவ தட்டேவ பிரதேசத்தில் நேற்று (08.02) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பின்னர், காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளதுடன், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version