Site icon Tamil News

13 ஆவது திருத்தத்தை எதிர்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உரிமை இல்லை!

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரட்டைக் கொள்கையை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தார்மீக உரிமை இல்லை.

“13வது திருத்தம் இன்னமும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்று நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர்  சாகர காரியவசம் அதற்கு எதிராக தனது கருத்தை தெரிவிக்கிறார். நாட்டின் முன் ‘இரட்டைப் போக்கை’ வெளிப்படுத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version