Site icon Tamil News

தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டு – செப்டம்பர் 28ம் திகதி தீர்ப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான 4 நாள் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைந்ததுடன், செப்டம்பர் 28ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

தனுஷ்க கைது செய்யப்பட்ட போது பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு இன்று நான்காவது நாளாக சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ​​முறைப்பாடு அளித்த பெண் வீடியோ தொழில்நுட்பம் மூலம் விசாரணைக்கு ஆஜராக, தனுஷ்க தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

குறித்த பெண் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி கேப்ரியல் ஸ்டீட்மன் மற்றும் தனுஷ்கவின் சட்டத்தரணி முருகன் தங்கராசா ஆகியோர் இன்று நீதிமன்றில் இறுதி வாதங்களை முன்வைத்தனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணை உறவுக்கு சம்மதிக்க வைக்க தனுஷ்கா பல முயற்சிகளை மேற்கொண்டதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனுஷ்காவின் சட்டத்தரணி, வாதப் பிரதிவாதத்தை முடித்துக் கொண்டு, தனுஷ்கா பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்தவர் மீண்டும் மீண்டும் அளித்த சாட்சியங்கள் மிகவும் முரண்பாடானவை என்று கூறினார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தனுஷ்க குணதிலக்க கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட போது பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தின் காணொளி காட்சியை நீதிமன்றம் முதன்முறையாக வெளியிட்டது.

Exit mobile version