Site icon Tamil News

பாணந்துறையில் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர் கைது

பாணந்துறை பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞன் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, வெக்கடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

குற்றத்தை நிறைவேற்றுவதற்காக பிரதான சந்தேகநபர் வந்த முச்சக்கரவண்டிக்குள் குறித்த பாடசாலை மாணவன் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக முதலில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நபர், காயங்களுடன் ஆடைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஓடியுள்ளார்.

ஆடைத்தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில், வாள்வெட்டுக் கொண்ட குற்றவாளி, தொழிற்சாலை வளாகத்திற்குள் அவரைப் பின்தொடர்ந்து தாக்குதலை நடத்துவதைப் படம்பிடித்துள்ளது. தலையில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு ஆளானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறே கொலைக்கான காரணம் என நம்பப்படுகிறது

Exit mobile version