Site icon Tamil News

டெங்கு நோய் குறித்து வைத்தியரின் அறிவிப்பு

 

கடந்த 4 மாதங்களில் மட்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30;’000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார்.

அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.

அதன் தரவுகளின்படி அன்றைய காலகட்டத்தில் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

மே மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது கம்பஹா மாவட்டத்தில் டெங்கு அதிக ஆபத்துள்ள நிலையில் காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி களுத்துறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு அபாயம் காணப்படுகின்றது.

தீவில் பதிவாகும் டெங்கு நோயாளர்களில் கிட்டத்தட்ட 50% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

Exit mobile version