Tamil News

அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்

Serviceman patrols in front of the Patriot air defence system during Polish military training on the missile systems at the airport in Warsaw, Poland February 7, 2023. REUTERS/Kacper Pempel

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஏவுகணைகள் உட்பட ரேடார் நிலையங்களை, ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்யா பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகள் மற்றும் பல ராணுவ ஆயுதங்களை வழங்கியிருந்தது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ரஷ்யாவின் ஏவுகணைகளை, ரேடார் மூலம் துல்லியமாக கண்டறிந்து உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

US Finalizing Arms Upgrade to Ukraine With Patriot Missiles - Bloomberg

இந்நிலையில் கடந்த மே 16ம் திகதி ரஷ்யாவின் Kinzhal ஹைப்பர் சோனிக் ஏவுகணை மூலமாக, அமெரிக்கா தயாரித்த பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ஐந்து ஏவுகணைகள் மற்றும் ரேடார் நிலையத்தை முற்றிலுமாக அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தரையில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஏவுகணைகள் சேதமடைந்துள்ளதாகவும், மேலும் ரேடார்களின் முக்கிய பாகங்கள் சேதமடையவில்லை எனவும் அமெரிக்காவின் செய்தி நிறுவனமான CNN தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்துவதால், உக்ரைனில் வாழும் மக்கள் எப்போதும் பதட்டமான சூழ்நிலையிலே வாழ வேண்டியுள்ளது.மேலும் ரஷ்யா இந்த மாதங்கள் மட்டும் இதுவரை ஒன்பது முறை ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version