Site icon Tamil News

24 காமிகேஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவை குறிவைத்து, மொஸ்கோ ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது.

இதன்படி 24 காமிகேஸ் ஆளில்லா விமானங்களில் 18ஐ வீழ்த்தியதாக உக்ரேனிய வான் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருங்கடல் கடற்கரை நகரமான ஒடேசா மீது வீசப்பட்ட 15 ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களில் 12 விமானங்களை அழித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கியேவை குறிவைத்து ஏவப்பட்ட ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக நகர நிர்வாகம் கூறியது.

அதேநேரம்  ஷாஹெட் அலைந்து திரியும் வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியும், கீயெவை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version