Site icon Tamil News

பிரையன்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான எதிர்வினையே உக்ரைனில் இன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதல் – மொஸ்கோ!

உக்ரைனின் பலப்பகுதிகளில் ரஷ்யா கொடூரமாக தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதல் பிரையன்ஸ்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடியாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.

குடந்த வாரம் உக்ரைன் சார்புக் குழு ஒன்று தெற்கு பிராந்தியத்தல் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தர். இதில் குழந்தைகள் உள்பட காரில் இருந்த பொதுமக்கள் மீது குற்றவாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் புடின் குற்றம் சாட்டினார்.

இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இன்றைய தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக மொஸ்கோ குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version