Site icon Tamil News

நேட்டோவில் சேர்வதற்கான கோரிக்கையை பரிசீலிக்குமாறு செலன்ஸ்கி வலியுறுத்தல்!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, நேட்டோவில் சேர்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக கோபன்ஹேகன் ஜனநாயக உச்சி மாநாட்டில் வீடியோ உரையில் பேசிய அவர்,  இராணுவக் கூட்டணியில் சேரும் கியேவின் முயற்சியில் “நேர்மறையான அரசியல் முடிவை” எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

“ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்கான நேரம் இது  எனக் குறிப்பிட்ட அவர், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கான அரசயில் முடிவை அங்கீகரிக்குமாறும் வலியுறுத்தினார்.

ஜூலை மாதம் வில்னியஸில் நேட்டோ உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. இதற்கிடையில் மேற்படி செலன்ஸ்கி கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உக்ரைன் சரியான நேரத்தில் சேர அனுமதிக்கப்படும் என்று நேட்டோ அமைப்பு கூறியுள்ளது.

Exit mobile version