Site icon Tamil News

நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்தாலும் மகனுக்கு தந்தை – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டுக்கு ஜனாதிபதி இருந்தாலும் அவரும் ஒரு மகனுக்குத் தந்தைதான் என்று கூறினார்.

அவரது மகன் ஹன்டர் பைடனுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, தம் மகனுக்குத் தமது அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

பைடனின் மகன் ஹன்டர் பைடன் துப்பாக்கி சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஹன்டர், கொக்கேய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கைத்துப்பாக்கியை வாங்கினார்.

துப்பாக்கியை வாங்கும்போது தாம் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று 54 வயது ஹன்டர் பொய் சொன்னதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்தது உட்பட அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. மூன்றிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அதிகபட்சம் 25 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஆனால் அவர் முதல்முறை குற்றவாளி என்பதால் சிறைத்தண்டனை விதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

தண்டனை அடுத்த சில மாதங்களில் அறிவிக்கப்படலாம். அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் அதிபரின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

பைடன் மகனுக்கு எதிரான வழக்கின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்ற நடைமுறையை மதிப்பதாகவும் கூறினார். ஹன்டர் பைடன் ஒரு வழக்கறிஞர். பிரபல யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவராகும்.

Exit mobile version