Site icon Tamil News

அமெரிக்காவில் கைல் என்ற பெயர் கொண்ட நபர்கள் ஒன்றுக்கூடி சாதனை செய்ய முயற்சி!

கைல் என்ற பெயர் கொண்ட நபர்கள் ஒன்றுக்கூடி உலக சாதனை முறியடிக்க முயற்சித்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள மைத்தானத்தில் அவர்கள் ஒன்றுக்கூடினர். இதன்படி 706 பேர் குறித்த மைதானத்தில் ஒன்றுக்கூடியுள்ளனர்.

இதற்கு முன்பதாக கடந்த 2017 இல் இவான் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதனை படைத்திருந்தனர். அப்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுக்கூடியிருந்தனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் பெயர்களை ஆண்டுதோறும் கண்காணிக்கும் சமூக பாதுகாப்பு நிர்வாகத்தின்படி, கைல் அமெரிக்காவில் பிரபலமான பெயர்களில் முதலிடத்தில் இல்லை.

2023 இல் ஆண் பெயர்களில் கைல் 416 வது இடத்தைப் பிடித்துள்ளதாக சமீபத்திய தரவு காட்டுகிறது. ஆகவே இந்த சாதனை முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

Exit mobile version