Site icon Tamil News

அமெரிக்க முதல் பெண்மணிக்கு மீண்டும் கொரோனா

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

இதனையடுத்து ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவிக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி ஜில் பைடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியா வருவார். திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Exit mobile version