Tamil News

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

தெஹ்ரான், மே13 ஹார்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் ஈரான் புரட்சி படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்கு கப்பலில் சிக்கியிருந்த 16 இந்தியர்கள் உட்பட அனைத்து மாலுமிகளும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக ஈரான் நடத்திய இந்த சிறைபிடிப்பு சம்பவத்தில் ஏற்கனவே ஒரு இந்தியப் பெண் மாலுமி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு மற்ற 24 மாலுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் ஆயுதப் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் கடந்த 6 மாதங்களாக நீடித்து வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குசெ செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியளார்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றர்.

Iran releases crew, including 16 Indians, of seized ship | India News -  Times of India

இந்திலையில் ஹார்முஸ் நீரிணையொட்டிய கடற்பகுதியில் போர்ச்சுகல் கொடி ஏற்றப்பட்ட இஸ்ரேலியருக்கு சொந்தமான ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்கு கப்பலை ஈரான் புரட்சி படையினர்கடந்த 13ம் திகதி அதிரடியாக சிறைபிடித்தனர். இந்தக் கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் பணியில் இருந்தனர்.

17 இந்தியர்களில் ஒரே பெண்ணான ஆன் டெஸ்ஸா ஜொசப் மட்டும் இந்தியா திரும்பினார். விடுவிக்கப்படாத மற்ற 16 இந்திய மாலுமிகளும் நலமுடன் இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்ந்தது

இந்நிலையில் 16 இந்தியர்கள் உட்பட கப்பலில் பணியிலிருந்த 24 மாலுமிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிராபக்முல்லாஹியன் கூறுகையில் மாலுமிகள் விடுதலையானதும் ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பலாம் ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும் என்றார்.

Exit mobile version