Site icon Tamil News

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனிக்கு வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் அரசாங்கமானது அண்மைக் காலங்களில் பல சட்டங்களை இயற்றி வருகின்றது.

ஜெர்மன் நாட்டுக்குள் வந்த அகதிகள் தங்களது அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களை வெகுவிரைவில் நாடு கடத்துவதற்கு ஏதுவான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

இதேவேளையில் ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற அகதிகளை ஜெர்மன் நாட்டில் வைத்து அவர்களது அகதி விண்ணப்பத்தை விசாரணை செய்யாது 3வது நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடான ருவண்டாவில் வைத்து விசாரிப்பதற்குரிய ஆலோசணைகள் ஜெர்மன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் ஜெர்மனியின் CSU கட்சி என்று சொல்லப்படுகின்ற ஒரு கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகரான டோபிரிங் அவர்கள் வெகுவிரைவில் ஜெர்மன் நாடானது ருகண்டா நாட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பிரதி பலித்து இருக்கின்றார்.

இந்த விடயத்தில் ஜெர்மன் அதிபர் ஓலா சொல்ஸ் அவர்கள் எதிர்வரும் கிழமை மாநில முதல்வருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வுள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version