Site icon Tamil News

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிர் தப்பிய இளைஞன் வெளியிட்ட தகவல்

பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஜன்னல் அருகில் இருந்ததால் உயிர் பிழைத்த இளைஞர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதுடன், காயமடைந்த 41 பேர் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பேருந்து விபத்தில் இருந்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

“கதுருவெலயிலிருந்து கல்முனைக்கு பேருந்து வந்தது. சுமார் 50 பேர் இருந்தனர். பத்து பேர் நின்ற நிலையில் பயணித்தனர். 7.30 மணியளவில் பேருந்து புறப்பட்டது.
அதிவேகத்திலேயே பேருந்து பயணித்தது. பேருந்து பாலத்தை நெருங்கும் போது திடீரென நின்றது. அது நின்று நொடி பொழுதில் பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.

நான் ஜன்னல் ஓரத்தில் இருந்தேன். அதனால் நான்தான் முதலில் வெளியே வந்தேன். 5 முதல் 10 நிமிடங்களில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் பலர் மயக்கமடைந்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த பேருந்து பயணிகள் போக்குவரத்துக்கான முறையான உரிமம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட சட்டரீதியற்ற அனுமதிப்பத்திரம் பயன்படுத்தி இவர்கள் பேருந்தை ஓட்டி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version