Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை: ஜி. எல். பீரிஸ்

ஜனாதிபதி தான்தோன்றிதனமாக அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் தலையை நுழைக்கின்றார். இது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும். இதனை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என சுதந்திர மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், திங்கட்கிழமை (11) தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜி. எல். நாவல சுகந்த ஜனதா சபையின் பிரதான காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு சிவப்பு விளக்கு காட்டியுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், தேர்தல் காலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version