Site icon Tamil News

ஐரோப்பாவில் ஊழியர்கள் ஹிஜாப் அணிவதை நிறுத்தலாம் : ஐரோப்பிய நீதிமன்றம்!

ஹிஜாப் அல்லது, மத நம்பிக்கையின் அடையாளங்களை ஊழியர்கள் அணிவது தொடர்பில் ஐரோப்பாவில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினை குறித்து  ஐரோப்பிய உயர் நீதிமன்றம் இன்று (28.11) தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி ஐரோப்பாவில் மத நம்பிக்கையின் அடையாளங்களை அணிவதை நிறுத்தும் வகையில்  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பெல்ஜிய முனிசிபாலிட்டியான ஆன்ஸ் ஊழியர் ஒருவர்  பணியாளர்கள் மத அல்லது கருத்தியல் நம்பிக்கையின் வெளிப்படையான அடையாளங்களை அணியாமல் கடுமையான நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக மாறிய நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மதச் சுதந்திரத்திற்கான தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் பணியிடத்தில் ஹிஜாப் அணிவதை நிறுத்தலாம் என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version