Tamil News

நயன்தாராவின் ‘ஜவான்’ பட லுக் லீக்கானது… இணையத்தை தெறிக்கவிடும் லேடி சூப்பர் ஸ்டார்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள, ‘ஜவான்’ படத்தில் இருந்து நயன்தாராவின் லுக் தற்போது லீக் ஆகி சமூக வலைதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.

ஜவான் படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இப்படம், செப்டம்பர் 7ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியே கசிந்துவிட கூடாது என படக்குழு பொத்தி பொத்தி பாதுக்காத்து வந்த நிலையில், அதையெல்லாம் மீறி எப்படியோ ட்ரைலர் ரிலீசுக்கு முன்பே நயன்தாராவின் புகைப்படம் லீக் ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்த புகைப்படத்தில் நயன்தாரா, மிகவும் ஸ்டைலிஷ் நாயகியாக மாறி கோட் – சூட்… அணிந்து ஃப்ரீ ஹேர் அழகில், தேவதை போல் ஜொலிக்கிறார்.

ரசிகர்கள் நயன் ஹாலிவுட் நாயகிகளையே அசர வைக்கும் அழகில் இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்த புகைப்படமும் தாறுமாறாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Exit mobile version