Site icon Tamil News

இதுவரை பார்க்காத வடிவேலு… அட்டகாசம்! ‘மாமன்னன்’ ட்ரைலர் இதோ…

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மாமன்னன்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இதில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் மாமன்னன் திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Exit mobile version