Site icon Tamil News

CWC Updates – இன்றைய போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் 27-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

அதன்படி பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 81 மற்றும் 109 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் 388 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ், போல்ட் தலா 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும், நீஷம், மேட் ஹென்றி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய டெவான் கான்வே 28 ரன்களையும், யங் 32 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் 116 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய டேரில் மிட்செல் 54 ரன்களையும், கேப்டன் டாம் லேத்தம் 21 ரன்களையும் எடுத்தனர்.

போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்றைய நாள் நடந்த இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் களமிறங்கியது.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக ஹசான் மிராஸ் 35 ரன்களும், மஹ்முதுள்ளா 20 ரன்களும், மஹெடி ஹாசன் 17 ரன்களும், தன்சித் ஹாசன் 15 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர்.

வங்காளதேச அணி 37.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

தொடர்ந்து டஸ்கின் அகமத் 11 ரன்களும், முஸ்தஃபிசர் ரஹ்மான் 20 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

இந்நிலையில், வங்காளதேசம் அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தனர்.

Exit mobile version