Site icon Tamil News

பயிற்சிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியினை முன்னிட்டு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இன்றைய பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இந்தியாவின் குவாட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அதன்படி, இலங்கை அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பெத்தும் நிஸ்ஸங்க 68 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பாக Tanzid Hasan 84 ஓட்டங்களையும் Mehidy Hasan Miraz ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும், Litton Das 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

Exit mobile version