Site icon Tamil News

உலகக்கோப்பையில் சதம் அடித்த நியூசிலாந்து வீரரின் பெயரில் உள்ள ரகசியம்

முதலில் நியூசிலாந்து உலகக்கோப்பை அணியில் இடம் பெறாத அவர் பின்னர் சில வீரர்களின் காயத்தால் அணியில் இடம் பெற்றார்.

அவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். அவரும் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான அவர் அவர்கள் பெயரை சேர்த்து ரச்சின் என தன் மகனுக்கு பெயர் சூட்டி இருக்கிறார்.

ரச்சினின் தந்தை பெயர் ரவி கிருஷ்ணமூர்த்தி. அவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றினார். பின்னர் 90களில் அவர் நியூசிலாந்து நாட்டிற்கு இடம் பெயர்ந்தார்.

அவர் பெங்களூரில் உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் மற்றும் ராகுல் டிராவிட், சச்சின் மீதான ஈர்ப்பால் தன் மகனுக்கு அவர்கள் இருவரின் பெயரையும் சேர்த்து வைக்க நினைத்தார்.

அதன் காரணமாக ராகுல் டிராவிட் என்ற பெயரில் இருந்து “ரா” வையும், சச்சின் என்ற பெயரில் இருந்து “ச்சின்”- னையும் இணைத்து ரச்சின் என அவருக்கு பெயர் வைத்து இருக்கிறார்.

நியூசிலாந்து அணியில் ஏற்கனவே இஷ் சோதி போன்ற சில இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். ரச்சின் ரவீந்திராவும் அதில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே, சில போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக ஆடி உள்ளார் ரச்சின். ஆனால், அவற்றில் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தவில்லை என்பதால் அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளராக ரச்சின் ரவீந்திரா உள்ளூர் போட்டிகளில் ஆடி கவனத்தை ஈர்த்தார். அதை அடுத்தே அவர் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

 

Exit mobile version