Site icon Tamil News

டொனால்ட் ட்ரம்ப்பின் வாழ்க்கை படத்தால் சர்ச்சை – படத்தை எதிர்த்து வழக்கு

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ட்ரம்ப் வேடத்தில் செபாஸ்டியன் ஸ்டான் நடித்துள்ளார். அலி அப்பாஸி இயக்கி உள்ளார். இந்த படம் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.

படத்தில் பெண்களை ட்ரம்ப் பலாத்காரம் செய்வது போன்ற அவதூறு காட்சிகள் இருப்பதாக சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தனது முதல் மனைவியான இவானாவை அவர் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது பார்வையாளர்களிடம் கடும் அதிர்வை ஏற்படுத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் இந்த படம் அவருக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில் டிரம்ப் வக்கீல்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேமலும், படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் பொய். எனவே படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version