Site icon Tamil News

சீன கப்பல்களை இலங்கையில் நிறுத்திவைக்க ஒருவருட காலத்திற்கு தடை!

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் அதன் துறைமுகங்களில் நிறுத்திவைக்கவோ அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) ஒரு வருட காலத்திற்கு செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 21, 2023 அன்று நடைபெற்ற  சந்திப்பின் போது, இந்திய மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கவலைகளுக்கு மதிப்பளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனவரி 5, 2024 முதல் மே இறுதி வரை தென் இந்தியப் பெருங்கடலில் “ஆழ்ந்த நீர் ஆய்வு” நடத்த திட்டமிடப்பட்ட சீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong 3 இற்கு  இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்படாது என செய்திகள் வெளியாகியுள்ளன.

Exit mobile version