Site icon Tamil News

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அநுரவுடன் சந்திப்பு

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.

தூதுக்குழுவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஜியான்சாவோ மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் சென் சியாங் யுவான் ஆகியோர் அடங்குவர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் அவர்கள் சந்திப்பின் போது கலந்துரையாடினர்.

NPPயின் பிரதிநிதிகள், தேர்தலுக்கான NPPயின் தயாரிப்பு மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து தூதுக்குழுவிற்கு விளக்கினர்.

இக்கலந்துரையாடலில் NPP பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஹரினி அமரசூரிய, NPP உறுப்பினர்களான சுனில் ஹதுன்னெத்தி மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version