Site icon Tamil News

இணையவழி மோசடி குறித்து கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் இணைய வழியில் கிறிஸ்மஸ் மரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு வழிகளில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்மோண்டன் பகுதியில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்ஷமஸ் மரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக இந்த பெண் பணம் செலுத்திய போதிலும் மரம் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.கிறிஸ்மஸ் மரம் கொள்வனவு செய்ய மேற்கொண்ட முய்சியின் ஊடாக இந்த பெண் 1500 டொலர்களை இழந்துள்ளார்.

google தேடுதளத்தில் கிறிஸ்மஸ் மரம் குறித்து தேடிய போது பட்டியலான முதலாவது இணையதளம் என்ற காரணத்தினால் இந்த இணையதளம் நம்பகமானது என கருதி பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.எனினும் குறித்த இணையதளத்தின் ஊடாக மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

Adjustabletrees.com என்ற இணையதளத்தின் ஊடாக கிறிஸ்மஸ் மரமொன்றை கொள்வனவு செய்ய முயற்சித்த பெண்ணே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version