Site icon Tamil News

இலங்கை வந்த கப்பலால் அமெரிக்காவில் இடிந்து விழுந்த பாலம் – 6 பேர் மரணம்

அமெரிக்காவின் பால்ட்டிமோர் (Baltimore) நகரில் இருந்து இலங்கை நோக்கி வந்த கப்பல் மோதியதில் இடிந்து விழுந்த பாலத்தில் இருந்து விழுந்த 6 பேர் உயிரிழ்நதுள்ளதாக எண்ணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நகரில் உள்ள Francis Scott Key பாலம் மீது சரக்குக் கப்பல் மோதியபோது பாலத்தின் மேலே வேலை செய்து கொண்டிருந்த 8 பேர் கீழே விழுந்தனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 6 பேரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து நேர்ந்து 18 மணி நேரம் ஆன நிலையில் அவர்கள் குளிரான நீரில் உயிரோடு இருப்பதற்கு சாத்தியம் அவ்வளவாக இல்லை என்று அமெரிக்கக் கடற்படையும் பொலிஸாரும் குறிப்பிட்டுள்ளனர்.

ஊழியர்கள் 50 அடி ஆழமுள்ள Patapsco ஆற்றுக்குள் விழுந்தனர். அதன் தட்பநிலை 8 டிகிரி செல்சியஸாக இருந்தது.

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தற்போது உதவி வழங்கப்படுகிறது. Francis Scott Key பாலம் மீது மோதிய Dali கப்பல் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து புலனாய்வாளர்கள் அமெரிக்கா செல்கின்றனர். அவர்கள் அங்குள்ள விசாரணைக் குழுவுடன் இணைந்து கொள்வர்.

Exit mobile version