Site icon Tamil News

கனடாவில் இடைத்தேர்தல்: பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு

கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ மற்றும் மனிடோபா பகுதிகளில் உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், மனிடோபாவில் Portage–Lisgar மற்றும் Winnipeg South Centre, கியூபெக்கில் Notre-Dame-de-Grâce–Westmount, ஒன்ராறியோவில் Oxford ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளில் எதிர்வரும் ஜூன் 19ம் திகதி இடைத்தேர்தல் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மரணமடைந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளில் உறுப்பினர்கள் பதவி விலகியதால் தேர்தல் முன்னெடுக்கப்பட இருக்கிறது.

Portage–Lisgar தொகுதியில் 14 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Candice Bergen பிப்ரவரி மாதம் பதவியை துறந்துள்ளார். இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Winnipeg South Centre தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான ஜிம் கார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்த நிலையில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. otre-Dame-de-Grâce–Westmount நீண்ட 14 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Marc Garneau பதவி விலகிய நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Oxford தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான டேவ் மெக்கன்சி, தாம் அரசியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலகான் டேவ் மெக்கன்சி அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version