Site icon Tamil News

இத்தாலியில் இலங்கையர் மீது கொலை முயற்சி! மற்றுமொரு இலங்கையர் கைது

இத்தாலியில் சக இலங்கையரை கொலை செய்ய முயன்ற மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியின் நேபிள்ஸில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதான வீடற்ற இலங்கையர் ஞாயிற்றுக்கிழமை சக இலங்கையர் ஒருவரை கத்தியால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஒருவர் காயமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சம்பவத்தில் 44 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் தாக்கப்பட்டு கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவர் பலமுறை ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதுடன் மூன்று காயங்கள் பெரியதாகவும் கடுமையானதாகவும் இருந்தன போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவரை பொலிஸார் பெல்லெக்ரினி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version