Site icon Tamil News

அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி தீர்மானம் – சீனாவுக்கு காத்திருக்கும் நெருக்கடி

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மூலோபாயமாக கருதப்படும் பல துறைகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 பில்லியன் டொலர் வரியை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் தொழிநுட்ப வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கிலும், அமெரிக்க தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம், மின்சார வாகனங்கள், சோலார் செல்கள், கிரேன்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரியை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அந்த இறக்குமதி வரிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமுல்படுத்தப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டாலும், சீனாவுடன் வர்த்தகப் போர் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version