Site icon Tamil News

புடினுடன் கைக்கோர்க்கும் வடகொரியா – சர்வதேச அரசியலில் திடீர் திருப்பம்

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடன் கைகோர்ப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தேசிய தினத்தையொட்டி, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “உக்ரைனுக்கு எதிரான இந்தப் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முடிவுக்கு முழு ஆதரவு தருவதோடு, முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

நீதி வெற்றி பெறுவது உறுதி. ரஷ்ய மக்கள் வெற்றி வரலாற்றில் தொடர்ந்தும் பெருமை சேர்ப்பார்கள்.

ஒரு சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்துக்கு இணங்க, ரஷ்ய அதிபருடன் கைகோர்க்கவுள்ளோம்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவுக்கு எங்கள் நாட்டின் முழு ஆதரவை வழங்கவுள்ளோம்” – என்றார்.

ரஷ்யா –  உக்ரைன் போர் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில், கிம் ஜோங் உன்னின் கருத்து சர்வதேச பரப்பில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version