Site icon Tamil News

பிரான்ஸ் இளைஞரிடம் இருந்து மில்லியன் கணக்கில் பணம், நகைகளை ஏமாற்றிய கிளிநொச்சி யுவதி

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து மில்லியன் கணக்கில் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிய கிளிநொச்சியை சேர்ந்த யுவதி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், குறித்த யுவதி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு பழகியுள்ளனர்.

தனது பெற்றோர் போரில் உயிரிழந்த நிலையில் தனது மூத்த சகோதரியுடன் தான் வாழ்ந்து வருவதாக பிரான்ஸ் இளைஞரிடம் யுவதி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையிலான உறவு, திருமண நிச்சயதார்த்தத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில், குறித்த யுவதிக்கு 60 இலட்சம் ரூபா பணம், 42 பவுண் நகை, பரிசுப் பொருட்கள் என்பனவற்றினை இளைஞர் அனுப்பியுள்ளார்.

இதன்பின்னர் குறித்த இளைஞன் கிளிநொச்சிக்கு வந்த போது யுவதி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள யுவதி தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version