Site icon Tamil News

இலங்கையில் 19 வயதுடைய இளைஞன் மர்ம மரணம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவரே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி கடுவலை பொலிஸார் கைது செய்யப்பட்ட அவர், மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்கவை தொடர்பு கொண்டு வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர் சிறைச்சாலையில் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.அதேநேரம், துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும் புத்தளம் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

Exit mobile version