Site icon Tamil News

தொழிலாளர்களுக்கான விரிவான நலத்திட்டங்கள்

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு அமுல்படுத்தப்படும் விரிவான நலத்திட்டங்களுக்கு பல அமைச்சுகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றை இணைத்து விரிவான பலதரப்பு செயலணியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொழிலாளர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை மையமாக கொண்டு தொழிலாளர் நலனுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடவடிக்கை ஆய்வை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கோரியுள்ளதுடன் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகரும் பிராந்திய நடவடிக்கை சேவை பிரிவின் தலைவருமான Imon Brimblecombe மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூக பாதுகாப்பு நிபுணர் Mariko Ouchi ஆகியோர் கலந்துகொண்டதுடன் அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.

நிதியமைச்சு, சுகாதார அமைச்சு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு, முதலாளிமார் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய இந்த செயலணியை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு பார்வையாளராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தையும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றுவதையும் அவர் வலியுறுத்தினார்.

வேலையின்மை காப்பீட்டு முறை, மகப்பேறு சலுகைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி விரிவான தொழிலாளர் சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அமைச்சகம் இப்போது எடுத்துள்ளது.

Exit mobile version