Site icon Tamil News

8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும்

நத்தப்பேட்டை பகுதி 27வது வார்டில் ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டில்  நத்தப்பேட்டை நகர்புற விரிவாக்கப் பகுதிகளான மாருதி நகர் விரிவாக்கம், முருகன் நகர், ராஜா அவன்யூ, சாய்பாபா நகர், தாட்டிதோப்பு, பல்லவன் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட

காலமாக  மண்சாலையை பயன்படுத்தி வந்த நிலையில் மழை காலங்களில் நீர் தேக்கமும் சேரும் சகஜமாக காணப்பட்டு நடந்து செல்வது கூட சரியான பாதை இல்லாத காரணத்தால் தங்களுக்கு சாலை அமைத்து தருமாறு பல்வேறு கோரிக்கை மனுக்களை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் இடம்

அளித்ததின் பெயரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நத்தப்பேட்டை மாருதி நகர் பகுதியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் தார் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜையுடன் தொடங்கி ஜேசிபி இயந்திரம் மூலம்  பணியை தொடங்கி வைத்து கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் சந்துரு, சுரேஷ், மாமன்ற உறுப்பினர் ஷாலினி வேலு மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version