Site icon Tamil News

காண்போரை பிரம்மிக்க வைத்த முளைப்பாரி ஊர்வலம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி பல்லவராயன் பத்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ.அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ.வலம்புரி விநாயகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டி பல்லவராயன் பத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோட்டைக்காடு கன்னியான் கொள்ளை,  கடுக்காக்காடு பொதுமக்கள் பல்லவராயன் பத்தை விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு மேளதாள இசை முழக்கத்தோடு ஊர்வலமாக ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலுக்கு எடுத்து சென்றனர்.

குதிரை நடனமிட வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்று காண்போரை பிரமிக்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Exit mobile version