Site icon Tamil News

கள ஆய்வு பணிக்காக இரண்டு நாள் பயணம்

கள ஆய்வு பணிக்காக இரண்டு நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சென்றார். இந்நிலையில், இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சிறப்பாக சமூக சேவையாற்றிய 13 நபர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நினைவு பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி 3 மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அறிவித்த நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களுக்கு செலவிடுவதுதான் திறம்பட்ட நிர்வாகமாகும். அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், பாராட்டை பெறும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது திட்டங்கள் செயலாக்கத்துக்கு ஏதுவாக இருக்கும். மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை விவசாயிகள் பயனடையும் வகையில் செயல்படுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம், பட்டா வழங்குதல் உள்ளிட்ட மக்களின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும்.முதல்-அமைச்சர் எப்போது வருவார் என எண்ணி பல மாவட்டங்களில் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். களஆய்வின் நோக்கம் நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Exit mobile version