Site icon Tamil News

ஹிந்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வட மாநிலத்தவர்கள் உணவகங்கள்,தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான ஒரு சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல பீகார் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சில பீகார் பத்திரிகைகள் தவறான ஒரு செய்தியினை பரப்பியதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில்

பணிபுரிந்து வரக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் அச்சத்துடன் இருந்து வருவதோடு தங்களது சொந்த ஊர்களுக்கு படை எடுத்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்த வட மாநிலத்தவர்களின் அச்ச நிலையால் இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு பதற்ற நிலையானது இருந்து வருகிறது.

இது குறித்து தமிழக காவல்துறையும் முதல்வர் தரப்பிலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தரப்பிலும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட வட மாநிலத்தவர்கள் தொடர்ந்து அச்ச நிலையில் இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக வட மாநிலத்தவர்கள் பணிபுரியக்கூடிய இடங்களுக்கே அந்தந்த காவல்நிலைகளுக்குட்பட்ட காவல்துறையினர் அச்சநிலையை போக்கும் வகையில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு காவல்துறையினர் நேரடியாக சென்று வட மாநிலத்தவர்களின் அச்ச நிலையை போக்கி

தங்களது பாதுகாப்பினை உறுதி செய்ய தமிழக அரசும்,தமிழக காவல்துறையும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும்,அது போன்று ஏதேனும் பிரச்சனை ஏற்படின் காவல்துறை கட்டுபாட்டு எண்ணை தொடர்பு கொள்ளவும் இந்தியில் அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வானது ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் காவல்துறையின் இத்தகைய விழிப்புணர்வு ஓர் அவசியம் வாய்ந்ததாக வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை நிர்வாகங்களின் தரப்பில் பார்க்கப்படுகிறது.

Exit mobile version