Site icon Tamil News

வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் நேற்றிரவு பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த வீட்டார் பாம்பு பிடி வீரரான அமீனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் கிரீன் கேர் சுற்றுச் சூழல் அமைப்பினர் பாம்பு பிடி வீரர் சினேக் அமீன் அழைத்துக் கொண்டு அங்கு சென்று பார்த்த வீட்டில் பழைய பொருட்கள் வைத்து இருந்த ஒரு பகுதியில் 5 அடி நீளம் உள்ள நாகப் பாம்பு சுருண்டு படுத்து கொண்டிருந்துள்ளது.

பின்னர் பத்திரமாக சினேக் அமீன் பாம்பை மீட்டு எடுத்தார். அந்த பாம்பு சுமார் ஆறு வயது மதிக்கத்தக்கது என அமீன் தெரிவித்தார். இதுகுறித்து மதுக்கரை வனசரகரிடம் தகவல் தெரிவித்த நிலையில் அதனை  பத்திரமாக வனப் பகுதிக்குள் விட்டு விட வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

இதையடுத்து உக்கடம் பெரியகுளம் மேற்கு கரை பகுதியில் நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள புதர் பகுதியில் அந்தப் பாம்பை விடுவித்தனர். இதனால் வீட்டின் குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதி பகுதி  பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தற்போது மழை மற்றும் வெயில் மாறி மாறி வருவதால் இது போன்ற விஷ ஜந்துக்கள், பூச்சிகள் ஆகியவை அதிகளவு வரக்கூடும் என்பதால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து பழைய தேவையில்லாத பொருட்களை அகற்றிவிடுமாறு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version