Site icon Tamil News

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அணியினர் மாவட்ட நீதிமன்றம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 33).இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றைய தினம் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து தமிழக முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு அணியின் மதுரை மாவட்ட தலைவர் ஐயப்ப ராஜா தலைமையில் வழக்கறிஞர்கள் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக, வழக்கறிஞர்களை தொடர்ந்து தாக்கி வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கடந்த ஓர் ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் குண்டர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு அணியினர் மதுரை மாவட்ட நீதிமன்றம் வாயில் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Exit mobile version