Site icon Tamil News

முப்பெரும் மஹா கும்பாபிஷேகம்

ஆவுடையார்கோவில் தாலுகா தாணிக்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துவிநாயகர்,ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அந்த கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 26ம் தேதி புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2நாட்களாக 3கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் சாமி அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏம்பல் எஸ்ஐ.சந்திரசேகர் தலைமையில்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version