Site icon Tamil News

கல்வியின் மூலம் வறுமையை ஒழித்து 20ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் களியனூர் பகுதியில் அமைந்துள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமி பார் சோசியல் என்டர் பார்ட்னர்ஷிப் வளாகத்தில் 20ம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றன.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டம் கல்வியின் மூலம்  வறுமையை  ஒழித்து கடந்த 20 ஆண்டுகளாக காஞ்சிபுரத்தை தலைமையாகக் கொண்டு இயங்கி  வருகின்றது.

ஆரம்ப காலகட்டத்தில் 2004 ஆம் ஆண்டு துவக்கத்தில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற பணியாற்றி வந்தனர்.

தற்போதைய இத்தொண்டு நிறுவனம் வறுமையின் பன்முகத்தன்மையை அகற்ற பல திட்டங்களாகவும் விரிவடைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு  முதல் குழந்தை தொழிலாளர் முறை  ஒழிப்பு திட்டத்தின் மூலம் நலிவுற்ற  குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள்,

பள்ளி செல்லா குழந்தைகள்,  பள்ளி இடை நின்ற குழந்தைகள் ,கொத்தடிமை குழந்தைகள் போன்றோரை கண்டறிந்து அவர்களை உண்டுஉறைவிட சிறப்பு பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு சிறந்த கல்வி, மருத்துவம்,  திறன் மேம்பாடு,

உயர்கல்வி, தொழிற்கல்வி  அளித்து கடந்த 20 ஆண்டுகளாக சேவை  செய்து வருகின்றது.

இதுவரை 12 உண்டு உறைவிட சிறப்பு பள்ளிகளை நடத்தி 5,798 மாணவ மாணவியர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளது. இப்பள்ளிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தனது 20 ஆண்டுகால வெற்றி பயணத்தினை கொண்டாடும் விதமாக தங்களது பள்ளியில் படித்த 500 முன்னாள் மாணவர்கள் காஞ்சிபுரம்,  திருவள்ளூர், வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தற்போது பயிலும் பாரதியார் மற்றும் பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பள்ளி மாணவ மாணவியர்கள் வரவேற்பு நடனம் ஆடினர்.

மேலும் 12 மாணவர்களையும் பாராட்டி பதக்கங்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண் தலைமை பண்பு குறித்து விளக்க உரையாற்றி சிறப்பித்தனர்.

ஹேண்ட் இன் ஹேண்ட்  இந்தியா நடத்தி வரும் உண்டு  உறைவிட பள்ளியில் தற்போதைய கல்வி பயிலும் 100 மாணவ மாணவியர்களும்,  250க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும்,  பணியாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்    ஹேண்ட் இன் ஹேண்ட்  இந்தியா  வடக்கு தலைவர் டாக்டர் மதுசரன், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கல்பனா சங்கர், ஹேண்ட் இன் ஹேண்ட்  இந்தியா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version