Site icon Tamil News

முதியோர்களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை – அரச ஊடக நிறுவனம் ஒன்றின் அறிவிப்பாளர் ராஜினாமா

இலங்கையிலுள்ள அரசாங்க ஊடக நிறுவனமொன்றில் தொகுப்பாளராகப் பணியாற்றிய இஷாரா தேவேந்திரா, தனது சுயமரியாதைக்காக தனக்குப் பிடித்த வேலையைத் துறக்க முடிவு செய்ததாகக் கூறுகிறார்.

மேலும் பலம் வாய்ந்ததாகக் காட்டிக் கொள்ளும் நிறுவனத்தில் உள்ள முன்னாள் மூத்தவர்களின் மன உளைச்சலைத் தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.

எனக்கு பிடித்த வேலையை விட்டுவிட்டேன்… சுயமரியாதைக்காக.. இந்தக் கதையை 15.03.2023 அன்று சொல்ல விரும்பினேன்.

ஏன் செய்தி வாசிப்பதில்லை, ஏன் பத்திரிகை நிகழ்ச்சியை நடத்துவதில்லை என பலர் என்னிடம் கேட்பதால் நான் இன்று இந்த கதையை கூறுகிறேன்.

2008 ஆம் ஆண்டு சிறுவர் செய்தி வாசிப்பாளராக ஊடக வாழ்க்கை தொடங்கிய நான் 2023-03-15 அன்று எனது ஊடக வாழ்க்கையை நிறுத்த நினைத்தேன். பெரிய வெறுப்பு மற்றும் துக்கத்துடன் அந்த முடிவை எடுத்தேன்.

நான் எனது தொழிலை விட எனது ஆத்ம கௌரவத்தை பாதுகாத்துக்கொள்வதில் எப்போதும் கவனமாக இருப்பேன்.  ஒரு பெண் தனியாக வாழ்வதால், அந்த பெண் விபச்சாரியாக மாற மாட்டாள். இதனை அறியாத வயதானவர்கள் போலியான பலத்தை காட்டிக்கொண்டு சில ஊடக நிறுவனங்களில் இருக்கின்றனர்.

நான் பல நிறுவனங்களில் பணிப்புரிந்துள்ளேன். எனினும் நான் கூறும் நிறுவனத்தில் வாழ்க்கையில் பாக்கியுள்ள வயதானவர்கள் இருந்தனர். மேலே செல்ல வேண்டுமாயின் என்னிடம் எதனையோ எதிர்பார்க்கும் காட்டுமிராண்டிகள்.

நான் சாட்சியங்களுடன் குரல் பதிவு, காணொளிகளுடன் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினாலும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இது எனக்கு மட்டும் நடந்தது அல்ல என்பதை முழு நிறுவனமும் அறியும் எனவும் இஷாரா தேவேந்திர தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

Exit mobile version