Site icon Tamil News

இன்று ஓய்வு பெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ரயில்வே திணைக்களம்!

நாடாளாவிய ரீதியில் இன்று பல தொழிற்சங்கள் போராட்டத்தை முன்னுஎடுத்துள்ள நிலையில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை , 10 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம் இடம்பெறுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான விசேட அனுமதியும் பெறப்பட்டதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர்  இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக  தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடன் காலை வேளையில் இவ்வாறு ரயில் இயக்கப்பட்டதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version