Site icon Tamil News

பெண்மையை போற்றிய விழாவில் நூற்றுக்கணக்கான மாணவிகள்

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்ற வாக்கியத்தின் பெருமையை பறைசாற்றி வருகிறது கோவை பி.பி.ஜி கல்லூரி.

அந்த வகையில்  பி.பி.ஜி கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியான மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உலக மகளிர் தின விழா கல்லூரியில் களைகட்டியது. சிறப்பு விருந்தினர் தோல் மருத்துவர் ஸ்வேதா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதையடுத்து மாணவிகள் உரையாற்றிய மருத்துவர் ஸ்வேதா,  பெண்கள் தங்களை தாங்களே அனைத்துவிதத்திலும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் மனம் மற்றும் உடல் அளவில் பெண்கள் வலிமையாக இருப்பது மிக முக்கியம் என்றும் மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து தனது துறையில் பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வரும் மருத்துவர் ஸ்வேதாவிற்கு ஒளிரும் நட்சத்திரம் என்ற விருது வழங்கப்பட்டது.

நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பி.பி.ஜி கல்வி குழும அறங்காவலர் அக்சய் தங்கவேலு, பி.பி.ஜி கலை மற்றும் அறிவியல்  கல்லூரியின் முதல்வர் முனைவர். முத்துமணி, மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version