Site icon Tamil News

தஞ்சையில் பரவும் மர்ம காய்ச்சல் : பரிசோதனைகள் தீவிரம்!

தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டாரங்களிலும் 20 களப்பணியாளர்களும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரத்தில் கூடுதலாக 20 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் காய்ச்சல் கண்டறியக்கூடிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு மருத்துவ குழுக்கள் மூலம் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது. அதற்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருவதால் மருத்துவர்கள் ஆலோசனைபடியே மருந்து உட்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version