Site icon Tamil News

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

தமிழ்நாடு முத்திரையர் சங்கம் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மதுரை ஆனையூர் பகுதியில் அதன் மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர்கள் அழகுமணி மற்றும் மாவட்ட துணை தலைவர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது . பின்னர் மாவட்ட தலைவர் மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி செய்தியாளர் கூறும் போது பேரரசர் பெரும்பிடுகு ழுத்தரையர் அவர்களின் 1348 வது பிறந்த நாள் விழாவை வருகின்ற 23 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடுவது நமது தலைமை சங்கத்திற்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிட திறப்பு விழாவிற்கு மதுரை மாவட்டத்திலிருந்து அதிகமானவர்கள் கலந்து கொள்வது இன்று உள்ள போலி சமூக நீதியை விரட்டி உண்மையாக சமூக நீதியை தமிழகத்தில் மலரச்செய்ய உடனடியாக ஜாதி வாரியாக கணக்கெடுப்பு புள்ளி விபரத்தை சேகரிப்பு சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜாதி வரை கணக்கெடுப்பின் அடிப்படையில் அவரவர் மக்கள் தொகையை விகிதாச்சாரப்படியும் கல்வி பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் கல்வி வேலை வாய்ப்பில் முத்தரையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அந்த பரிந்துரைகளை ஏற்று வலையர் புனரமைப்ப வாரியம் அமைக்கக்கோரி எங்கள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசிடம் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தோம் இவ்வாறு அவர் கூறினார் பேட்டி குப்புசாமி மாவட்டத் தலைவர் மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்

Exit mobile version