Site icon Tamil News

சுவிஸில் இலங்கை தடகள வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் தடகள விழாவில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட தடகள வீரர் கிரேஷன் தனஞ்சய காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்பாய்ச்சல் போட்டியில் (ஆண்கள்) இலங்கை சாதனை படைத்த தனஞ்சய, இலங்கையின் நீளம் தாண்டுதல் தேசிய சாம்பியனும் ஆவார்.

தனிப்பட்ட அழைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த போட்டி சுற்றுப்பயணத்தில் இலங்கையின் நீளம் தாண்டுதல் சம்பியனான சாரங்கி டி சில்வா மற்றும் தேசிய தடகள பயிற்சியாளர் வை.கே.குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட அழைப்பிதழ் என்பதால் போட்டி விஜயத்திற்கு இலங்கை தடகள சங்கம் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version